தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சனாதன தர்மம் குறித்த விளக்கம் தகவல் அறியும் சட்டத்தில் வராது - ஆளுநர் மாளிகை - ரவி

சனாதன தர்மம், இந்து மதத்தின் அர்த்தம் குறித்த விளக்கங்கள் தகவல் அறியும் சட்டத்தில் வராது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சனாதன தர்மம் குறித்த விளக்கம் தகவல் அறியும் சட்டத்தில் வராது
சனாதன தர்மம் குறித்த விளக்கம் தகவல் அறியும் சட்டத்தில் வராது

By

Published : Oct 15, 2022, 6:08 PM IST

சென்னை: சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகஸ்ட் 19ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொதுக் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த ம் குறித்த விளக்கம் தகவல் அறியும் சட்டத்தில் வராது - ஆளுநர் மாளிகைகேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.

அதன்படி, சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன, உருவாக்கியவர் யார், வேறு எந்த நாட்டிலோ பின்பற்றப்பட்டுள்ளதா, பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நீங்கள் உறுப்பினரா, தமிழ்நாடு அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்

இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சார்பு செயலாளர் சி.ரமா பிரபா, ஆளுநரிடம் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது என்றும், அதுதொடர்பாக தகவல்கள் ஆளுநரின் செயலகத்தில் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கொள்ளை - கதவை உடைத்து துணிகரம்

ABOUT THE AUTHOR

...view details