சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த செப்டம்பர் மாதம் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டி சட்டப்பேரவையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது.
அந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு தொடர்பாக ஆளுநரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.
நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், நீட் தேர்வு மிகவும் பின்தங்கிய மாணவர்களைக் காப்பதாக விளங்குகிறது எனக்கூறி அந்த மசோதாவை அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, பிப்ரவரி 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் போன்ற எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், நீட் விலக்கு தொடர்பாகச் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு, நீட் விலக்கு தொடர எனத் தெரிவிக்கப்பட்டது.