தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

DMK boycott in lok sabha: நீட் மசோதா விவகாரம்; மக்களவையில் திமுக அமளி! - நீட்

தமிழ்நாடு அரசின் நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில் பாராளுமன்ற மக்களவையில் (DMK boycotted in lok sabha) திமுகவினர் அமளி துமளியில் ஈடுபட்டனர்.

lok sabha
lok sabha

By

Published : Feb 3, 2022, 9:40 PM IST

Updated : Feb 4, 2022, 6:43 AM IST

டெல்லி : நீட் தேர்வுக்கு எதிரான மசோதா (Governor returns anti-NEET Bill) விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தமிழ்நாட்டின் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து (DMK boycott in lok sabha) வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (பிப்.3) திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பாராளுமன்றத்தில் அமளி துமளியில் ஈடுபட்டனர். மேலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும் திமுகவினர் கோஷமிட்டனர்.

டிஆர் பாலு

இந்த விவகாரம் குறித்து பேசிய திமுக எம்பி டிஆர் பாலு, “நீட் மசோதாவை 5 மாதங்கள் கழித்து ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அவருக்கு நீட் மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரம் இல்லை” என்றார்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் மசோதா திருப்பி அளிக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக ஆர்.என். ரவி, நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை திருப்பியனுப்பிய நிலையில், இது மாணவர்கள் நலனுக்கு எதிரானதாக கருதுகிறேன்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : பாஜகவினரே... கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்... எம்.பி. மஹுவா மொய்த்ரா...

Last Updated : Feb 4, 2022, 6:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details