புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் நிறுவனம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இங்கு புற்றுநோய்க்கென சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் நவீன முறையிலும், குறைந்த செலவிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ஆளுநர் புரோகித் நிதி வழங்கியுள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது விருப்ப நிதியிலிருந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு 51 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி 11 லட்சம் நிதியும், இன்று 40 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.