தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! - Governor

ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

By

Published : Oct 7, 2022, 8:04 PM IST

சென்னை: ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்களைப் பார்த்து ஏராளமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக பலர் பணத்தை இழந்து பெரும் கடனாளியாகவும், தற்கொலைக்கும் தள்ளப்படுகின்றனர் எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்தச்சூழலில் அதற்குத்தடை விதிக்க வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க, அவசரச்சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று(அக். 7) ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். செல்போன் எண்ணின் இருப்பிடத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போலி ஆவணங்கள் மூலம் பணமோசடி வழக்கு; ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details