தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் - Education Management Website

சென்னை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் பயில்வது குறித்த விவரங்களை சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை

By

Published : Oct 4, 2019, 2:13 PM IST

சமீப காலமாகவே, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர் என்கிற விவரங்களை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details