தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவி உயிரிழப்பு விவகாரம் - அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க தேசிய மனித உரிமைகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விஷயங்களில் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் கேட்டுக்கொண்டார்.

By

Published : Jul 25, 2022, 9:43 PM IST

இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் - கள்ளகுறிச்சி சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை அமைப்பு
இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் - கள்ளகுறிச்சி சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை அமைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் இருந்த 3 ஆம் தளத்தில் இருந்து கிழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிர் இழப்பிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்தநிலையிலை கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தேசிய தலைவர், ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,

முதலில் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்த பெண் தங்கியிருந்த விடுதிக்கு சரியான அனுமதி பெறவில்லை. காவல்துறை கைப்பற்றிய தற்கொலை ஆவணத்தில் இறந்த பெண் தனக்கு அந்த குறிப்பிட்ட பள்ளி ஆசிரியர்கள் படிப்பது சம்பந்தமாக அழுத்தம் கொடுக்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

எனவே இதுதான் காரணம் என்று சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு மார்க்ஸ் கூறுகையில், இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனினும் அந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கக்கூடிய பிரச்சினை தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தது போல தெரிகிறது.

அது மட்டுமின்றி இந்த பிரச்சினையை பள்ளி நிர்வாகம் கையில் எடுத்துக்கொண்டு முடித்து வைத்திருக்க வேண்டும். இதனுடைய விளைவுதான் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது என்ற நிலைமை வந்துள்ளது. இதே வகையில் தான் மற்றுமொரு பள்ளியில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது. அந்த பெண் தொடர்ந்து புகார் அளித்தும் நிர்வாகம் தலையிடவில்லை.

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் பேட்டி

தமிழ்நாட்டில் அரசு கல்வி நிறுவனகங்ளும் அதிக அளவில் உள்ளன. ஆனால் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் தனியார் கல்வி நிறுவனகளில்தான் அதிக அளவில் நடக்கின்றன. இந்த தற்கொலை சம்பவத்திற்கான காரணம் வெளிவந்துவிட்டது. மேலும் குறிப்பிட்ட இயக்கங்கள்தான் இந்த சம்பவங்களில் ஈடுபட்டுள்ளன என்கின்றனர். தேவையெனில் ஒரு குழு அமைத்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வோம்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்து வருத்தத்தை அளிக்கிறது. இந்த பிரச்சினையை உணர்ந்து கொள்ளாமலும் தொடர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை கணக்கில் எடுத்து எடுத்துக்கொள்ளாமல், போராட்டக்காரர்களை கடுமையான வார்த்தைகள் மூலம் விமர்சனம் செய்ததை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து.

இதன் மூலம் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வருகிறது, என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியைப்போல் திருவள்ளூரிலும் பள்ளி மாணவி மரணம்; காவலர்கள் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details