சென்னை:அசோக் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளியின் சுற்றுச்சுவர் போதியப் பராமரிப்பு இல்லாததால், இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் 8ஆவது தெருவில் செயல்பட்டுவரும், அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கக்கூடிய நிலையில், பள்ளியின் சுவர் இப்படி பராமரிப்பு இல்லாமல் விழுந்தது, அந்தப் பகுதியில் உள்ள மக்களிடத்திலும், மாணவர்களின் பெற்றோரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விபத்து இன்று காலை 5.45 மணிக்கு இடிந்து விழுந்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் படிவத்தை நிரப்பினால் உங்கள் வீடு பாதுகாக்கப்படும் - வேலூர் ஏ.எஸ்.பியின் புதிய முயற்சி!