சென்னை:அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெண்களுக்குத் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்குப் பதிலாக, இத்திட்டம் அரசுப்பள்ளிகளில் படித்து, கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டமாக மாற்றப்பட்டது.
கல்வி உதவித்தொகை திட்டம்: இதுகுறித்து உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பலவகையான உயர்கல்வி படிப்புகளை படித்துவரும் மாணவிகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.