தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”கரோனா தொற்று காரணத்தால் சத்துணவு மையங்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் சத்துணவு மையங்களுக்கு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட, பருப்பு, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவை 4 மாதங்கள் ஆனதால், வண்டு உருவாகி வீணாகியுள்ளது. சமையல் எண்ணையும் கெட்டுப்போயுள்ளது.
வீணான பொருட்களை தொடர்ந்து பள்ளி சத்துணவு மையங்களிலேயே இருப்பதால் சுகாதாரமற்ற நிலை ஏற்படும் அவலம் உள்ளது. எனவே, 144 தடை உத்தரவு காலம் என்பதால், உணவுப் பொருட்களை அமைப்பாளர்கள் கொண்டு போய் கொடுக்க இயலாத சூழல் உள்ளது. ஆகையால், நேரில் சென்று பொருட்களை வாகனம் வைத்து பெற்றுக்கொண்டு, பள்ளி திறக்கும் போது திரும்ப வழங்க வேண்டும் ” எனக் கூறியுள்ளனர்.