இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், "தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி நிறுவப்படும் என்று சட்டப்பேரவையின் விதி 110-இன் கீழ், 20.3.2020 அன்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதனடிப்படையில் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவ, மொத்தம் 265.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஐந்து ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேனியில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி - அரசாணை வெளியீடு - கால்நடை மருத்துவக் கல்லூரி
சென்னை: தேனி மாவட்டம் வீரபாண்டியில் 265 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
assembly
80 மாணவர்களை ஆண்டுதோறும் சேர்ப்பதை நோக்கமாகக்கொண்டு நிறுவப்படவுள்ள இக்கல்லூரியை ஆரம்பத்தில் 40 மாணவர்களுடன் தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஆறாவது கால்நடை மருத்துவக் கல்லூரியாக வீரபாண்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்