தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'புலிகளுக்கு பெரும் ஆபத்து; நியூட்ரினோ வேண்டாம்' - பூவுலகின் நண்பர்கள்

நியூட்ரினோ உணர்க்கருவி அமைக்கப்படும் குகைப் பகுதி முழுவதுமாக மதிகெட்டான் - பெரியார் புலிகள் வலசை இணைப்புப் பாதையினுள் வருவதால், தமிழ்நாடு அரசு நியூட்ரினோ திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

By

Published : Jun 11, 2021, 1:31 AM IST

Updated : Jun 11, 2021, 2:10 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு நியூட்ரினோ திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ட்விட்டர் பதிவில், "டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூட்ரினோ தொடர்பான ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஒரு வரைபடம் தயார் செய்ததில் நியூட்ரினோ உணர்க்கருவி அமைக்கப்படும் குகைப் பகுதி முழுவதுமாக மதிகெட்டான் - பெரியார் புலிகள் வலசை இணைப்புப் பாதையினுள் வருகிறது.

உலகளவில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் 70% புலிகள் இந்தியாவில் உள்ளது. பெரியார் தேசிய பூங்காவையும் மதிகெட்டான் சோலை பூங்காவையும் இணைக்கும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இந்த பாதை அமைந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு நியூட்ரினோ திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 11, 2021, 2:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details