இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை நிறைவு செய்த, ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 3000ஆக உயர்த்தியும், ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை - கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியம்
சென்னை: கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதியத்தை மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருக்களை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, கிராமக் கோயில் பூசாரிகளின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 4,000 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை நிறைவு செய்த, ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000ஆக உயர்த்தியும், ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதற்கென 2021-2022ஆம் நிதியாண்டு முதல் ஆண்டுதோறும் தொடர் செலவினமாக, செலவினத் தொகை 11 கோடியே 72 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், நடப்பு நிதியாண்டில் நான்கு மாதங்களுக்கு மட்டும் தேவைப்படும் கூடுதல் தொகையான மூன்று கோடியே 13 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.