இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மைச் செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3 ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு - ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் மூன்று ஐஏஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Government of Tamil Nadu
சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக இருந்த டாக்டர் கார்த்திகேயன் ஐஏஎஸ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு ஐஏஎஸ், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர், செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.