மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு ஊக்கத்தொகை ரூபாய் ஆயிரத்து 500-லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய் தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்குள்ளான நபர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை ஆயிரத்து 500-லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.