தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர்புயல் பாதிப்புகள்: முதல்கட்டமாக ரூ.74 கோடி ஒதுக்கீடு - Government of Tamil Nadu Allocation

சென்னை: நிவர்புயல் பாதிப்புகளை சீர்செய்ய தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ.74 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

நிவர்புயல் பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு
நிவர்புயல் பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாயை ஒதுக்கியது தமிழக அரசு

By

Published : Dec 9, 2020, 6:00 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசு, "புயல் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.74 கோடியே 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இப்பணத்தை மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், பொதுப்பணி, வேளாண்மை, நெடுஞ்சாலை, மின்வாரியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கும் பயன்படுத்த விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் மழை வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.24 லட்சமும். வெள்ளக்கட்டுப்பாடு, சீரமைப்புப் பணிகளுக்காகப் பொதுப்பணித்துறைக்கு ரூ.20 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மானக் கழகம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் ரூ.20 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details