சென்னை:அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருபவர் கார்த்திக் (21). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் பழைய சென்ட்ரல் சிறைச்சாலை இருந்த பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு (பிப்ரவரி 3) மாணவர்கள் அனைவரும் பேசிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். மாணவர்கள் அனைவரும் காலையில் எழுவதற்குள் முன்கூட்டியே எழுந்து விடுதியை விட்டு வெளியேறிய கார்த்திக், தனது வாட்ஸ்அப் குழுவில் ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பிவிட்டு எங்குப் புறப்பட்டுச் சென்றார் என்பது தெரியவில்லை.