தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆக்கிரமிப்பை அனுமதித்தால், பேராசைக்காரர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள்'

அலுவலர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதித்தால், பேராசைக்காரர்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Oct 8, 2021, 4:39 PM IST

சென்னை: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த எஸ்.ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ள அரசு நிலத்தை, 9 பேர் ஆக்கிரமித்தது மட்டுமின்றி, அதில் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும், அங்குள்ள வாடகைக்கு உள்ளவர்களை காலி செய்ய உத்தவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனுமதித்தால் பேராசைக்காரர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள்

இதுகுறித்து நீதிபதி, "அரசு நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக கட்டடங்களை கட்டி, வாடகைக்கு விட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்கிறது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளுக்கு தொடர்ந்து அனுமதித்தால் பேராசைக்காரர்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள்.

அத்துடன் ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக பொறுப்பை தட்டிக்கழித்து செயல்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மீது அதிருப்தி ஏற்படுகிறது. எனவே, நிலத்தை மீட்டு அதற்கான நிதி இழப்புகளை மதிப்பீடு செய்து, வசூலிக்க வேண்டும். குறிப்பாக இந்த பணிகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்" என உத்தவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ABOUT THE AUTHOR

...view details