வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் வலுப்பெற்று நாளை (நவ.25) மாமல்லபுரம்-புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் பெரிய படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். சிறிய படகுகளை அங்கு நிறுத்த இடப்பற்றாக்குறை நிலவும் நிலையில், புதுச்சேரி, நல்லவாடு மீனவ கிராமப்புற மக்கள், தங்கள் பைபர், கட்டுமரப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த கடற்கரைப் பகுதியிலிருந்து அவற்றை அகற்றி தங்கள் வீட்டு தெருவோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.