சென்னை: நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் கே.என்.நேரு பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
- தென்காசி மாவட்டம் - சுரண்டை
- திருநெல்வேலி மாவட்டம் - களக்காடு
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
- காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர், மாங்காடு
- விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பம்
- ராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர்
- செங்கல்பட்டு மாவட்டம்- நந்திவரம், கூடுவாஞ்சேரி