இதுதொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், “ தமிழ்நாடு அரசின் நிரந்தர பெண் பணியாளர்களுக்கு, 270 நாட்கள் அதாவது ஒன்பது மாதங்கள் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படும். அந்த சலுகை தற்போது அரசின் அவசர காலங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக பெண் பணியாளர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 9 மாத பேறுகால விடுப்பு - அரசாணை வெளியீடு! - அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும்
சென்னை: அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு சலுகைகள் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
assembly
அதன்படி, குறைந்தபட்சம் ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கு, முழு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பாக ஒன்பது மாதங்கள் வழங்கப்படும். மேலும், இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண் ஊழியர்களுக்கே இச்சலுகை பொருந்தும் “ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’மருத்துவர்கள், மருத்துவமனை குறித்து தவறான செய்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது’