தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம் - Permission for public transport from June 28

ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம்
ஜூன் 28 முதல் விரைவுப் பேருந்துகள் இயக்கம்

By

Published : Jun 26, 2021, 2:54 PM IST

Updated : Jun 26, 2021, 5:47 PM IST

14:50 June 26

தமிழ்நாட்டில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் ஜூன் 28 முதல் பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை வகை 1, 2, 3 என பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில் வகை 3இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது  வகை 2இல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வகை 2இல் பேருந்துகள் இயக்கம்: 

இந்த அனுமதியின் அடிப்படையில், அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை,  தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில்  வரும் ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் அரசு விரைவு பேருந்துகள் சேவை தொடங்கும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

மேலும் 50 விழுக்காடு இருக்கைககளுடன் குளிர்சாதன வசதி இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் கரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: +2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு

Last Updated : Jun 26, 2021, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details