சென்னை: கடந்த 5ஆம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் பகுதியில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தின் கிடங்கு மேலாளராகப் பணிபுரிந்துவந்த சரண்யா, தனது அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள செப்டிக் தொட்டியில் விழுந்து இறந்தார்.
அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் - கமல் ஹாசன் ட்வீட்! - அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் கமலஹாசன் ட்வீட்
அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும் என கமலஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Kamal tweet
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்னை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை' - நீதிபதிகள் வருத்தம்