சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டமும் ,தர்ணா போராட்டமும் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக எங்களின் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் சம்பளத்திற்காக கடந்த ஒன்றரை வருடமாக போராடி வருகிறோம். எங்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு கடந்த ஒரு மாதமாக மண்டல வாரியாக தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறோம்.