தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது' - government buildings without facilities for the disabled

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான அடிப்படை வசதிகளின்றி அரசு கட்டடங்கள் கட்டக்கூடாது என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
mhc

By

Published : Jul 5, 2021, 7:06 PM IST

சென்னை:அரசு கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதிகள் சஞ்ஜீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், 32 மாவட்டங்களில் உள்ள அரசு கட்டடங்களில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா? என்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அரசுக் கட்டடங்கள்

அனைத்து அரசு கட்டடங்களும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும். இதுகுறித்து இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் கட்டக் கூடாது.

இதுதொடர்பான சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று பொதுப்பணித் துறையினுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details