சென்னை: தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், கரோனா பரவல் காரணமாக, ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நீட், வேளாண் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாள்களுக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆவின் விலை தமிழ்நாடு அரசால் அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விற்பனை ஏறத்தாழ 1.5 லட்சம் லிட்டர் அளவு உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.