தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுரேந்தர், கோபால் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - கருப்பர் கூட்டம்

சென்னை: கறுப்பர் கூட்டம் சுரேந்தர், இந்து தமிழர் பேரவை கோபால் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

gopal
gopal

By

Published : Jul 27, 2020, 7:48 PM IST

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்து வீடியோ பதிவேற்றிய கறுப்பர் கூட்டம் சுரேந்தர் உள்பட 4 பேர் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் காட்சிப்பதிவு வெளியிட்ட இந்து தமிழர் பேரவையைச் சேர்ந்த கோபால் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மற்றும் இந்து தமிழர் பேரவையின் கோபால் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: உறவினர்களுடன் முருகன், நளினி பேச அனுமதிக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details