துபாயில் இருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று(மே.8) வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது திருச்சியைச் சேர்ந்த கருணமூர்த்தி (23) என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனா்.
வேக்கம் கிளீனருக்குள் 251 கிராம் தங்கம்... ஒருவர் கைது! - Gold seized at Chennai air port
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12.21 லட்சம் ரூபாய் மதிப்புடைய 251 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
![வேக்கம் கிளீனருக்குள் 251 கிராம் தங்கம்... ஒருவர் கைது! துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.12.21லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:26:06:1620478566-tn-che-03-gold-smuggling-visual-script-7208368-08052021181945-0805f-1620478185-296.jpg)
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.12.21லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்
அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் இருந்த வேக்கம் கிளீனரை(தூசி உறிஞ்சி இயந்திரம்) உடைத்து பார்த்தபோது, அதனுள் 251 கிராம் தங்க உருளை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு 12 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயாகும். இதையடுத்து பயணி கருணாமூர்த்தியை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.