ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முகமது நஜீ. இவர் சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஜக்காரியா என்ற தங்கம் கடத்துபவரிடம் குருவியாக 15 வருடம் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 11ஆம் தேதி முல்தகுசீம் என்ற கூட்டாளியுடன் துபாய் சென்றுள்ளார். மீண்டும் 12ஆம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் இருவரும் வந்துள்ளனர். ஏர்போர்ட்டில் இருந்த உளவுத் துறையினர் சந்தேகப்பட்டு முகமது நஜி, முல்தகுசீமை ஆகிய இருவரையும் சோதனை செய்துள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் இருவரும் ஒரே மாதத்தில் எட்டு முறை துபாய் சென்று வந்தது தெரியவந்துள்ளது.
குருவியாகச் செயல்பட்டவரையே கடத்தி மிரட்டிய தங்கக் கடத்தல் மன்னன்கள் கைது! - Gold Smugling Kuruvi kidnapped
சென்னை: தங்கக் கடத்தலில் மோசடி செய்ததாக குருவியாக செயல்பட்டவரைக் கடத்தி மிரட்டிய போலி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை சென்னை கடற்கரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அலுவலர்கள் சந்தேகமடைந்து மெட்டல் டிடக்டர் வைத்து சோதனை செய்ததில், இருவரும் தங்கத்தை உடலில் வைத்து கடத்தியதை கண்டுபிடித்தனர். பின் தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஆசனவாயில் இரண்டு பேரும் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை முடிந்து வெளியில் வந்தவுடன், இந்தத் தகவலை தங்கம் கடத்தச் சொன்ன ஜக்காரியா, முனாசீர் அலி ஆகிய இருவரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜக்காரியா சில வழக்கறிஞர்களுடன் சேர்ந்து, குருவியான முகமது நஜியை கடத்தியுள்ளார். திருவல்லிக்கேணி, மண்ணடியில் உள்ள அறைகளில் நஜியை வைத்து அடித்து உதைத்துள்ளனர்.
கடத்திய தங்கத்தை திருப்பி தருமாறும், இல்லையெனில் ஐந்து லட்சம் பணத்தை கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் கும்பல் கும்பலாக இவர்கள் சென்று வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வடக்கு கடற்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முகமது நஜியை ஜக்காரியா குழுவினர் கடத்தியது தெரிய வந்துள்ளது. பின் அவரை கடத்திய தங்கக் கடத்தல்காரர் ஜக்காரியா, முனாசீர் அலி, கூட்டாளி சிராஜூதிந்,போலி வழக்கறிஞர்கள் ராஜாராம், தியாகராஜன் ஆகிய ஐவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்த நபர்களிடம் தங்கக் கடத்தல் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.