சென்னை:துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தங்க கடத்தல் விவகாரம் - சுங்கத்துறை அலுவலர் வீட்டில் சோதனை - Gold Smuggler
15:02 September 23
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் குறித்து சுங்கத் துறை அலுவலர் வீட்டில் சோதனை நடைபெற்றது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக நேற்று (செப்.22) இரவு திருவல்லிக்கேணியிலுள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் சென்ற அலுவலர்கள், தங்கம் கடத்தி வந்த நான்கு பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூன்று கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர் தியாகராஜன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், சூளைமேடிலுள்ள அவரது வீட்டிற்கு விரைந்த புலனாய்வு பிரிவு அலுவலர்கள், தங்கம் கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க:சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தல்: பெண் உள்பட இருவர் கைது