சென்னை:சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் துபாயிலிருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களைக் கண்காணித்தனர்.
அப்போது திருச்சியைச் சேர்ந்த அப்துல் பாசித் (வயது-32) சிவகங்கையைச் சேர்ந்த சாகுல் அமீது(வயது-34) தேனியைச் சேர்ந்த சரவணன்(வயது-33) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உடைமைகளைச் சோதனை செய்தனர். அதில் அப்துல் பாசித் பழைய ஒலி பெருக்கி வைத்திருந்தார்.