தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முறுக்குப் பிழியும் கருவியில் தங்கக் கட்டிகள்: சென்னையில் கடத்தல் ஆசாமி கைது - gold smuggling guy arrested by chennai airport customs officers

சென்னை: சவூதி அரேபியாவிலிருந்து சென்னைக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை முறுக்குப் பிழியும் கருவிக்குள் வைத்து கடத்தி வந்த இளைஞரை சுங்கத் துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.

By

Published : Oct 2, 2019, 10:05 AM IST

சென்னை விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சவூதி அரேபியாவில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவர் வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் சுங்கத் துறையினர் அவரிடம் விசாரித்தனர்.

கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள்

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சதாமின் உடமைகளை சோதனைசெய்தனர். அவர் வைத்திருந்த பையில் முறுக்கு தயாரிக்கும் கருவி இருந்ததுள்ளது. அதனை சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்து பார்த்தபோது, அதற்குள் ஆறு தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், 21 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 555 கிராம் தங்கத்தை பறிமுதல்செய்தனர். மேலும் ஆந்திர இளைஞர் சதாம் உசேனை கைது செய்த சுங்கத் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: குருவியாகச் செயல்பட்டவரையே கடத்தி மிரட்டிய தங்கக் கடத்தல் மன்னன்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details