சென்னை:அபுதாபியிலிருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று (நவ.07) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது விமானத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். இதனால், சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடம் இருந்த சூட்கேஸை சோதனை செய்தனர்.