சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த காதர் மைதீன் (45) என்பவர் சோதனைப் பகுதியிலிருந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு நடந்து சென்றதைக் கண்ட சுங்கத்துறை அலுவலர்கள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
பின்னர் அவரை சோதனை செய்தபோது அவரிடம் ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. பின்னர் கால் செருப்பை எடுத்து பார்த்தபோது, அதில் துளையிட்டு தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர்.
அவரிடமிருந்து ரூ. 27 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 640 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தபின், காதர் மைதீனை கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள், யார், யார் இந்தக் கடத்தலில் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தெர்மல் ஸ்கீரினிங் பரிசோதனைக்குப் பிறகே செயலகத்துக்குள் என்ட்ரி - தலைமைச் செயலர் உத்தரவு