சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எட்டு கிலோ தங்கம் சிக்கியது! - Chennia Revenue Office
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (மார்ச். 24) உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட எட்டு கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எட்டு கிலோ தங்கம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோவையிலிருந்து வந்த பயணி திலீப் குமார் என்பவரின் உடமைகளை அவர்கள் சோதனை செய்தனர் அதில் எட்டு கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய ஆவணம் இல்லாததால், தங்கத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அதனை பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், தனியார் நகைக்கடைக்கு நகைகளை கொண்டு செல்வது தெரியவந்தது.