தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உள்ளூர் சந்தையில் தங்கம் விலை மாற்றம் அடைந்துவருகின்றது.
அதன்படி, இன்று (ஜன. 08) சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் 4,754 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. வெள்ளி ஒரு கிராம் 74 ரூயாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகின்றது. நேற்றைய (ஜன. 07) தினத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.