தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை விமான நிலையத்தில் ரூ. 69 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - gold smuggling at chennai airport

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 69 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.52 கிலோ தங்கம், மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம்
கடத்தல் தங்கம் பறிமுதல்

By

Published : Jan 22, 2022, 6:28 AM IST

சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்க இலாகா அலுவலர்கள் பரிசோதனை செய்தனர்.

அப்போது, ராமநாதபுரம் சுந்தரபாண்டியபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் தங்கம், மின்னணு பொருள்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 69 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.520 கிலோ தங்கம் மற்றும் மின்னணு பொருள்களை சுங்க இலாகா அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஆசிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details