சென்னை: ட்விட்டரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக GoBackStalin எனும் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
GoBackStalin ட்விட்டரில் முதலமைச்சருக்கு எதிராகப் பரப்புரை! - ட்விட்டர் ட்ரெண்டிங்
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ட்விட்டர்வாசிகள் GoBackStalin எனும் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இவ்வேளையில் முதலமைச்சருக்கு ஆதரவாகவும் WeStandWithStalin எனும் ஹேஷ்டேக் கொண்ட பதிவுகளை சமூக வலைத்தளவாசிகள் வேகமாகப் பதிவிட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு எதிராக உலகளவில் ட்ரெண்டாகிய முதல் ஹேஷ்டேக் இதுவாகும். இவ்வேளையில், முதலமைச்சருக்கு ஆதரவாகும் WeStandWithStalin எனும் ஹேஷ்டேக் கொண்ட பதிவுகளும் சமூக வலைத்தள வாசிகள் அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.