சென்னை: ஆவடியில் இருந்து திருப்பதி வரை செல்லும் தடம் எண் 201 சிறப்புப் பேருந்தை பால்வலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் நேற்று (அக்.16) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அப்போது பயணிகளை நேரத்துடன் அழைத்துச் சென்று அழைத்து வர ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கை கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர், “மக்கள் பயன்பாட்டிற்காக ஆவடியில் இருந்து திருப்பதி வரை செல்லும் பேருந்து தொடங்கப்பட்டது.
ஆட்டுப் பாலும் ஆவினில் விற்பனை
தொடர்ந்து பெங்களூரு வரை செல்லும் பேருந்தும் ஆவடியில் இயக்கப்படும். கடந்த ஆட்சியில் ஊழல் செய்தே கஜானவை காலி செய்துவிட்டனர். இதனை சரி செய்ய தற்போதுள்ள அரசுப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர் ஆவின் பால் கலப்பின மாடுகளில் இருந்து பெறப்படுகிறது. வரும் காலங்களில் நாட்டு மாடு மட்டுமல்லாமல் ஆட்டு பாலும் ஆவினில் விற்பனைக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க:வெளியார் நுழைய 'உள் அனுமதிச்சீட்டு' முறை வேண்டும் - தமிழ் தேசியபேரியக்கம் வலியுறுத்தல்