சென்னை: முதலமைச்சரின் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ’முதல்வரின் முகவரி’ என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், முதலமைச்சர் குறைதீர் ஒருங்கிணைப்பு மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைந்து ’முதல்வரின் முகவரி’ என்ற பெயரில் சிறப்பு துறை உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்ப்பட்டுள்ளார்.
இவர் முன்னதாக உருவாக்கப்பட்ட ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில், இது தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதலமைச்சரின் தனிப்பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலுள்ள சிறப்பு அலுவலர், தனிப்பிரிவில் உள்ள அலுவலகங்கள் ’முதல்வரின் முகவரி’ துறையின்கீழ் செயல்படும்.
முதல்வரின் முகவரி துறை குறித்த அரசாணை ’முதல்வரின் முகவரி’ ஒற்றை இணையதள துறையாக செயல்படும். இந்தத் துறைக்குத் தேவையான உதவிகள் மின் ஆளுமை முகாமல் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’கல்விக்கூடங்களை இன்னும் எவ்வளவு காலம் இப்படி வைத்திருக்கப் போகிறோம்...’ - ஜோதிமணி கவலை!