தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டினப்பாக்கத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டீல் நவீன மீன் அங்காடி - அரசாணை வெளியீடு - பட்டினப்பாக்கம், லூப் சாலையில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டீல் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியீடு

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒன்பது கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டீல் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

GO Issued for Rs 10 crore modern fish market at Loop Road, Pattinapakkam
GO Issued for Rs 10 crore modern fish market at Loop Road, Pattinapakkam

By

Published : Jan 15, 2022, 10:12 PM IST

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையில் ரூ .9.97 கோடி மதிப்பீட்டீல் நவீன மீன் அங்காடி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, மீனவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என அறிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் வகையிலும், மீனவர்களின் நலன், வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும் ஒன்பது கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி அமைக்க அரசின் நிர்வாக அனுமதி கோரி விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 125 பட்டினப்பாக்கம் கடற்கரை ஒட்டியுள்ள லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நிர்வாக அனுமதியும், உள்கட்டமைப்பு, வசதிகள் நிதியின்கீழ் ரூ ஒன்பது கோடியே 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் விரைந்து தொடங்கப்படும் எனவும், இந்த நவீன மீன் அங்காடியில்...

  • சுற்றுச்சுவருடன் 366 மீன் அங்காடிகள்,
  • மீனவர்கள், பொதுமக்களுக்கான குடிநீர், கழிவறை வசதிகள்,
  • மீன்களைச் சுத்தம் செய்ய தனியாக இரண்டு பகுதிகள்,
  • இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யப்பட்ட பிறகே வெளியேற்றும் வகையில் 40 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (Effluent Treatment Plant),
  • 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதி,
  • மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளும் - உயர் கோபுர மின் விளக்குகளும்

ஏற்படுத்தப்பட உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு கரும்பில் முறைகேடு? - அரசு கவனிக்குமா...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details