தமிழ்நாடு

tamil nadu

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு ஏற்புடையது - ஜி.கே. வாசன்

By

Published : Dec 29, 2020, 7:18 PM IST

தனது உடல் நலனில் அக்கறை கொண்டு ரஜினி எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு ஏற்புடையது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதியில் தன் புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை இன்று தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த முடிவு குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீடுழி வாழ வேண்டும். அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அதிராகப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதற்கு தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு இருந்தது. இன்று அவர் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறி கட்சி ஆரம்பிக்கவில்லை,காரணம் தனது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். உடல்நலம் என்பது அனைவருக்கும் பொருந்தும் ரஜினி இவ்வாறு அக்கறை எடுத்திருப்பது ஏற்புடையது.

த.ம.க.,வைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக அதிமுகவின் கூட்டணியில் இருக்கிறோம். தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகளில் சிறப்புடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் போன்றவர்கள் மக்கள் நலன் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்பது தமகாவின் விருப்பம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரஜினியின் முடிவு துணிச்சலானது! - ரவிக்குமார் எம்.பி.

ABOUT THE AUTHOR

...view details