தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெர்மனியிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் - போதை மாத்திரைகள் பறிமுதல்

ஜெர்மனி நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

போதை மாத்திரைகள்
போதை மாத்திரைகள்

By

Published : Jul 23, 2021, 4:28 PM IST

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் அஞ்சல் சரக்ககப் பிரிவுக்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவில் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அலுவலர்கள் அஞ்சல் சரக்ககப் பிரிவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜெர்மனி நாட்டிலிருந்து சென்னை முகவரிக்கு வந்த வாழ்த்து அட்டை பார்சலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்செய்யப்பட்டன.

முதல்கட்ட தகவலில் போதை மாத்திரைகளின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என்பதும், அனுப்பப்பட்ட முகவரி போலியானது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்கவண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details