தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகாவீரர் ஜெயந்தி: நாளை இறைச்சிக் கடைகள் மூடலா? - நாளை இறைச்சி கடைகள் மூடல்

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அறிவிப்பு
மாநகராட்சி அறிவிப்பு

By

Published : Apr 13, 2022, 9:28 PM IST

சென்னை:மகாவீரர் ஜெயந்தியையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சியில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.

அதன்படி, நாளை (ஏப்.14) மஹாவீரர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதேநாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டில் பெரும்பாலனோர் இறைச்சி சாப்பிடுவது வழக்கம். இதனால், நாளை இறைச்சி கடைகள் மூடப்படுமா? என்று மக்களிடையே கேள்வி எழத் தொடங்கியது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சென்னை மாநகராட்சியின் சார்பில் நான்கு இறைச்சிக் கூடங்கள் இயங்கி வருகிறது. அது நாளை மூடப்படுகிறது. மேலும், ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், நாளை இறைச்சிக் கடைகளை மூட, அந்தந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இறைச்சிக்கடைகள் வழக்கம்போல் செயல்படலாம். அதற்கு மாநகராட்சி சார்பில் தடையில்லை' என்றனர்.

இதையும் படிங்க: மதுரை அருகே கி.பி. 10ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details