சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று (டிச. 28) காலை 11 மணியளவில் ஒரு நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சந்தேகத்திற்கு இடமாக அங்கு சுற்றித்திரிந்த ஒரு நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது! - Chennai District News
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரை கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் நெற்குன்றம், வடுவை அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (33) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல்செய்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சசிகுமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் கோபால் என்பவரிடமிருந்து கஞ்சாவைப் பெற்று சென்னையில் கடத்திக் கொண்டுவந்து பிரபல கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
மேலும் சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தங்கையா என்பவருக்கு கஞ்சா விற்பனை செய்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அலுவலகம் எதிரே காந்தி சிலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த தங்கையாவை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தங்கையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை வாங்கி சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவரும் நபர்களுக்கு விற்பனை செய்துவந்ததாகவும் அதேபோல் கஞ்சா தேவைப்படுவோருக்கு தனது காரிலேயே கொண்டு சென்று கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல்செய்தனர். ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா அனுப்பிய கோபால் என்பவரை கைதுசெய்வதற்காக நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.