தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கைப்பைக்குள் கஞ்சா.. காவல் துறை விசாரணை...

சென்னை: ரயிலில் கைப்பையில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 30கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள்

By

Published : Nov 30, 2019, 12:41 PM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த சர்க்கார் விரைவு ரயிலில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது என்ஜினுக்கு அடுத்த பொதுப்பெட்டியில் அனாதையாக மூன்று பெட்டிகள் இருப்பதை கண்டனர். இந்த பெட்டிகளை திறந்து பார்க்கும்போது அதில் இருந்த கைப்பையில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

மேலும் இந்த கஞ்சாவை கடத்தி வந்த நபர் காவல்துறையினருக்கு பயந்து பெட்டியை விட்டுச் சென்றாரா என்பது குறித்தும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கடத்தலில் ஈடுபட்டவரை வலைவீசி தேடி வருகின்றனர்

இதையும் படிங்க:

தஞ்சாவூர் இளைஞர்கள் கோவையில் திருடிய பைக்குகள்!

ABOUT THE AUTHOR

...view details