சென்னை:இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921ஆம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு!
இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று!
மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
மதுரையில் ஆடைப் புரட்சி
மகாத்மா காந்தி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். அதன் நூற்றாண்டு விழா இன்று (செப். 22) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பலரும் தேசத்தந்தையை நினைவுகூருகின்றனர். அந்த வகையில் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்திக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: காந்திக்கு அரையாடை அடையாளம் தந்த மதுரை - சுதந்திரப் போரின் மகத்தான வரலாற்று பக்கம்