2017ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் பலர் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டுப் போராடினர். அப்போது அவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி, 140-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வேதாரண்யம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இவ்வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக, தங்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.