தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயங்காத பிஎஸ்என்எல் தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம்

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் இயங்காத பிஎஸ்என்எல் தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இயங்காத பிஎஸ்என்எல் தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம்
இயங்காத பிஎஸ்என்எல் தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்திய திருவொற்றியூரை சேர்ந்தவர் தொண்டர் சுப்பிரமணி

By

Published : Apr 28, 2022, 7:48 AM IST

Updated : Apr 28, 2022, 2:02 PM IST

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்தவர் தொண்டர் சுப்பிரமணி. இவர் வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். மேலும் திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் தொண்டர் இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதனுடைய மாநில தலைவராக இருந்து வருகிறார்.

மேலும் அலுவலக பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 044 - 25990099 என்ற தொலைபேசி இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் பெற்றார். ஆனால் தொலைபேசி எண் இணைப்பு வழங்கிய நாள் மட்டுமே தொலைபேசி வேலை செய்ததாகவும், அதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்யவில்லை என தெரிவித்தார். இதற்காக 2 மாத கட்டணம் செலுத்தியும் வேலை செய்யவில்லை எனவும், இதுகுறித்து தொலைபேசி உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதனால் விரக்தி அடைந்த அவர், செயலிழந்த தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது எல்லையம்மன் கோவில் சந்திப்பில் உள்ள அவரது சொந்த இடத்தில் செயலிழந்த தொலைபேசிக்கு மாலை அணிவித்து தாரை தப்பட்டைகள் முழங்க, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக தொலைபேசியை அங்கேயே வைத்துள்ளார்.

அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் தனது நிலத்தில் செயல்படாத தொலைபேசியை 29 ம் தேதி அடக்கம் செய்ய போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க:பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை எப்போது கிடைக்கும்? - சு.வெங்கடேசன் கேள்வி

Last Updated : Apr 28, 2022, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details