சென்னை:புரசைவாக்கம் சி.எஸ்.ஐ இவர்ட் (CSI Ewart) பள்ளியில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 80 விழுக்காடு மாணவிகளுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.